வேலூர் மாவட்டம் குடியாத்ததில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்ச்சங்கத்தின் சார்பில் வாயிற்க்கூட்டம்!

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்ச்சங்கத்தின் சார்பில் வாயிற்க்கூட்டம்!

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1886 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டஆசியாவின் முதல் நகராட்சியான வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்எனும் குடியேற்றம் நகராட்சியில் இன்று 1-7-2026 புதன் கிழமையன்றுகாலை இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்ச்சங்கத்தின் சார்பில்வாயிற்க்கூட்டம் நடைபெற்றது . சகோ . ஜெகன் அவர்கள் தலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் * திரு . இரா . அன்புவேந்தன் * அவர்கள் சிறப்புரையாற்றினார் . நூற்றாண்டு கண்ட நகராட்சி எனும்பெருமை கொண்ட நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள்பெருமைப்படும் நிலையில் இல்லை . இந்நிலை மாறவேண்டும் எனில்ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட சட்ட விதிகளின்படி ராணுவவீரர்கள் , காவல் துறையினர் , மருத்துவர் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரபணியாளர்களைப்போன்று , தூய்மை பணியாளர்கள் , DBC பணியாளர்கள்உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஒப்பந்த பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் , அனைவருக்கும் ESI - EPF திட்டத்தில்இணைக்கவேண்டும் , இத்தொழிலாலர்களை மாண்புடன்நடத்தப்படவேண்டும் எனவும் , நிரந்தரப் பணியாளர்களுக்கு முறையானஓய்வுத்தியம் வழங்கப்படவேண்டும் , பதவியர்வு வழங்க வேண்டும் , உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   ஜோசப்விஜய் அவர்கள் நிறைவேற்ற முன் வரவேண்டும் என கோரிக்கை வைத்தார் . உடன் மாநில தலைமை நிலைய செயலாளர் திருமதி . . கல்பனா , மேலாளர்திரு . நந்தகோபால் , மேற்பார்வையாளர்கள் , திரு . வானவராயன் , திரு . சூர்யா , திரு . K. முனிரத்தினம் , பரந்தாமன் , சந்தோஷ் , திருமதி . கௌசல்யா , பிரேம்குமார் , அர்ஜுன் , கணபதி , விஜயலட்சுமி , பரமேஸ்வரி , விஜயா மற்றும்நிரந்தர , ஒப்பந்த ப்பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கலந்துக்கொண்டனர் . 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy