ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1886 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டஆசியாவின் முதல் நகராட்சியான வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்எனும் குடியேற்றம் நகராட்சியில் இன்று 1-7-2026 புதன் கிழமையன்றுகாலை இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்ச்சங்கத்தின் சார்பில்வாயிற்க்கூட்டம் நடைபெற்றது . சகோ . ஜெகன் அவர்கள் தலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் * திரு . இரா . அன்புவேந்தன் * அவர்கள் சிறப்புரையாற்றினார் . நூற்றாண்டு கண்ட நகராட்சி எனும்பெருமை கொண்ட நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள்பெருமைப்படும் நிலையில் இல்லை . இந்நிலை மாறவேண்டும் எனில்ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட சட்ட விதிகளின்படி ராணுவவீரர்கள் , காவல் துறையினர் , மருத்துவர் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரபணியாளர்களைப்போன்று , தூய்மை பணியாளர்கள் , DBC பணியாளர்கள்உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஒப்பந்த பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் , அனைவருக்கும் ESI - EPF திட்டத்தில்இணைக்கவேண்டும் , இத்தொழிலாலர்களை மாண்புடன்நடத்தப்படவேண்டும் எனவும் , நிரந்தரப் பணியாளர்களுக்கு முறையானஓய்வுத்தியம் வழங்கப்படவேண்டும் , பதவியர்வு வழங்க வேண்டும் , உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்விஜய் அவர்கள் நிறைவேற்ற முன் வரவேண்டும் என கோரிக்கை வைத்தார் . உடன் மாநில தலைமை நிலைய செயலாளர் திருமதி . ச . கல்பனா , மேலாளர்திரு . நந்தகோபால் , மேற்பார்வையாளர்கள் , திரு . வானவராயன் , திரு . சூர்யா , திரு . K. முனிரத்தினம் , பரந்தாமன் , சந்தோஷ் , திருமதி . கௌசல்யா , பிரேம்குமார் , அர்ஜுன் , கணபதி , விஜயலட்சுமி , பரமேஸ்வரி , விஜயா மற்றும்நிரந்தர , ஒப்பந்த ப்பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கலந்துக்கொண்டனர் .