தவறை ஒப்புக்கொண்டு கோவையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் அரசியல்கட்டாயத்தால் 30 ஆண்டுகள் விதிமீறல்கள் நடந்தன
கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்அழுத்தம் மற்றும் அரசு நிர்வாகத்தில் நிலவிய முறைகேடுகள் காரணமாக, போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக அளவிலான கனிமவளங்களை ஏற்றிச் சென்றதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் பகிரங்கமாகஒப்புக்கொண்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இத்தகைய சட்டவிரோதசெயல்களில் ஈடுபடப் போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாகஅறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களுக்காகசுமார் 2,000 டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசுசட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வலியுறுத்தும் வகையில், அண்மையில்விதிமுறைகளை மீறிய 33 லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது. இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, இத்தனை ஆண்டுகளாகமுந்தைய ஆளுங்கட்சிகளின் முறைகேடுகளுக்கு பயந்து, வேறு வழியின்றிசட்டவிரோதமாக கனிம வளங்களை ஏற்றிச் சென்றதாக லாரிஉரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பூர்வமாக மட்டுமே இனி லாரிகளை இயக்க விரும்புவதாக குவாரிஉரிமையாளர்களிடம் லாரி தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால், குவாரிஉரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இதன்காரணமாக, தங்களின் சட்டப்பூர்வமான நிலைப்பாட்டை வலியுறுத்தும்விதமாக 3 நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில்பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்தனைஆண்டுகளாக தங்களின் பங்களிப்புடன் நடந்த தவறை இனி ஒருபோதும்தொடர மாட்டோம் என்றும் லாரி உரிமையாளர்கள் கூட்டாகத்தெரிவித்துள்ளனர்.