அரசியலிலும் பொதுவாழ்விலும் அர்த்தத்தைத் தேடுவோம்..!! - காயல் அகமது சாகிபு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

அரசியலிலும் பொதுவாழ்விலும் அர்த்தத்தைத் தேடுவோம்..!! - காயல் அகமது சாகிபு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்த மனிதனால் எந்தத்துன்பத்தையும் தாங்கி வெற்றி பெற முடியும்.


 

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, பல மூத்த அரசியல்வாதிகளின்நடவடிக்கைகள் நமக்கு வியப்பை அளிக்கின்றன. பலர், தங்களுடையஅரசியல் வாழ்வே கேள்விக்குறியாகி விட்டதாக எண்ணுகிறார்கள். தேர்தல்வெற்றியும் தோல்வியும் அரசியலின் ஒரு பகுதிதான். ஆனால் அரசியலின்அர்த்தத்தை அதனோடு மட்டும் இணைத்துப் பார்க்கும்போது, விரக்தியேமிஞ்சுகிறது.


 

நம்பிக்கையை இழக்காதவர்கள் மிகக் கடினமான சூழல்களையும் கடந்துசெல்ல முடியும். தேர்தல் வெற்றியும், தோல்வியும் ஒரு பயணத்தின் முடிவுஅல்ல. புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு. பதவி இல்லாததால்பொதுச்சேவை முடிவதில்லை. அதிகாரம் இல்லாததால் லட்சியம்அழிவதில்லை. பதவியும், அதிகாரமும் நிரந்தமுமல்ல.


 

இரண்டாம் உலகப் போரின்போது நாசி வதைமுகாம்களில் அரசியல்கருத்துகளையும் சமூகநலக் கொள்கைகளையும் கொண்ட பலரும்கைதிகளாக அடைக்கப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினரை இழந்தனர். பட்டினி, கொடுமை, மரண அச்சம் ஆகியவற்றை அனுபவித்தனர். அந்தச்சூழலில் சிலர் மனமுடைந்து உயிரிழந்தார்கள். சிலர் மட்டும் நம்பிக்கையுடன்வாழ்ந்தார்கள். அவர்களுக்கிடையேயான மிகப் பெரிய வித்தியாசம்ஒன்றுதான். "வாழ்க்கைக்கும், தங்கள் போராட்டத்திற்கும் ஒரு தெளிவானநோக்கம்" இருந்தது.


 

அதனால்தான், வாழ்க்கையிலும் அரசியலிலும் முதலில் தெளிவானநோக்கம் இருக்க வேண்டும். மனிதனின் மிகப் பெரிய உந்துசக்தி இன்பமோஅதிகாரமோ அல்ல. வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதுதான். அரசியலிலும் அது பதவி, புகழ் அல்லது அதிகாரத்தைத் தேடுவது அல்ல.  மக்களுக்கான சேவை, சமூகநீதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தைநிலைநாட்டுவதே உண்மையான அர்த்தமாகும்.


 

துன்பத்தை எப்போதும் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தத் துன்பத்தை நாம்எவ்வாறு பார்க்கிறோம் என்பதே நம்மை வரையறுக்கிறது. துன்பம் கூடவாழ்க்கைக்கு அர்த்தத்தை வழங்க முடியும். அதுபோல, அரசியல்தோல்விகளும் ஒரு தலைவரை மேலும் முதிர்ச்சியடையச் செய்யும்அனுபவங்களாக மாறலாம்.


 

சூழ்நிலைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் நமது மனநிலையைத்தேர்ந்தெடுப்பது நம்மிடமே உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் மனிதனின்கடைசி சுதந்திரம், தன் அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்தான். இந்த உண்மை அரசியல் வாழ்விற்கும் முழுமையாகப் பொருந்துகிறது.


 

அன்பு, சேவை, பொறுப்பு மற்றும் சாதனை ஆகியவற்றின் மூலமேவாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறிய முடியும். அதேபோல், அரசியல்வாழ்வின் அர்த்தமும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதிலும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக நிற்பதிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகஇடைவிடாது உழைப்பதிலும் இருக்கிறது.


 

ஒரு பதவி கிடைக்காததால் பொதுச்சேவையை கைவிடுபவர் அரசியலின்அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர். ஒரு தேர்தல் தோல்வியால் மக்களைவிட்டு விலகுபவர் பொதுவாழ்வின் நோக்கத்தை உணராதவர்.


 

உண்மையான தலைவர்கள் வெற்றியால் உருவாகவில்லை. தோல்விகளைத்தாண்டியும் தங்கள் இலட்சியத்தை விட்டுவிடாத மன உறுதியால்உருவாகிறார்கள்.


 

எந்தச் சூழ்நிலையிலும் நமது சிந்தனையையும், பண்பையும், மக்களுக்கானஅர்ப்பணிப்பையும் யாராலும் பறிக்க முடியாது. இதுவே ஒரு அரசியல்செயற்பாட்டாளரின் மிகப் பெரிய சுதந்திரம்.


 

எனவே, அரசியலில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களேசுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். "நான் ஏன் அரசியலில்இருக்கிறேன்?" என்ற கேள்விக்கான பதில் தெளிவாக இருந்தால், எந்தத்தோல்வியும், எந்த விமர்சனமும், எந்தச் சோதனையும் அவர்களின்பயணத்தை நிறுத்த முடியாது.


 

அரசியலில் நீடித்து நிற்பவர்கள் அதிகாரத்தைத் தேடியவர்கள் அல்லர். அர்த்தமுள்ள பொதுவாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள்தான் அரசியல் அரங்கில்தாக்குபிடித்துள்ளனர்.


 

அரசியல் அரங்கில் பயணிக்கும் அனைத்து தோழர்களுக்கும் இக்கட்டுரைசமர்ப்பணம்.


 

இவண்

வழ.காயல் அகமது சாகிபு

மாநிலச் செயலாளர்

[கருத்தியல் பரப்புரை]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy