சேலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சேலம் மத்திய மாவட்டம் சார்பில்கோட்டை மைதானத்தில் நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பைகண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் சேலம் மத்திய மாவட்டதலைவர் ஷேக் முகமது தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர்இஸ்மாயில் வரவேற்பு உரை ஆற்றினார் . ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரைநிகழ்த்தியவர்கள் மாவட்ட செயலாளர் சையத் அலாவுதீன் , சேலம் மண்டலசெயலாளர் பெரோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் . மாவட்டநிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் . மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இம்ரான்அலி , வெல்டிங் பாபு , சையத் சபீர் , முகமது ரபிக் மற்றும் முக்கிய நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர் . 

இதில் இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புமுஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகையை   கோரமுடியாது என்றுசென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது .   இந்தஉரிமையை நிலை நாட்ட தமிழக அரசு உடனடியாக தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து இஸ்லாமியர்களின் அரசியலமைப்பு சட்டபூர்வ உரிமையைநிலை நாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்சார்பில் வலியுறுத்தப்பட்டது . இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழக   நிர்வாகிகள் , உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுதங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் . 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy