வாசிப்பே வெற்றிக்கான அடித்தளம் கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு – தேவகோட்டை கருவூல அலுவலர் கருணாநிதி

வாசிப்பே வெற்றிக்கான அடித்தளம்  கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு – தேவகோட்டை கருவூல அலுவலர் கருணாநிதி

3422201f-d84f-44cb-99a2-4230114f9a79.webp

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம்நடுநிலைப் பள்ளியில், கோடை விடுமுறைக் காலத்தில் புத்தகங்களைவாசித்து சிறப்பான பின்னூட்டங்களை வழங்கிய மாணவ, மாணவியரைப்பாராட்டும் வகையில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


 

விழாவிற்கு பள்ளி ஆசிரியை வினோதா வரவேற்புரை வழங்கினார். பள்ளித்தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக தேவகோட்டை சார் நிலை கருவூல அலுவலர் கருணாநிதிகலந்து கொண்டு, புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குபரிசுகளை வழங்கி பாராட்டினார்.


 

அப்போது அவர் பேசியதாவது:


 

ஒரு புத்தகத்தை வாசிப்பது மட்டுமல்ல, அதிலிருந்து நாம் என்னகற்றுக்கொண்டோம் என்பதைப் பதிவு செய்து சிந்திப்பதும் மிகவும்முக்கியமானது. புத்தக வாசிப்பு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடஉதவுவதோடு, நினைவாற்றல், பேச்சுத்திறன், சிந்தனைத்திறன் மற்றும்பொதுஅறிவை மேம்படுத்துகிறது.


 

நல்ல புத்தகங்கள் மனிதனின் குணநலன்களை வளர்க்கின்றன. உலகில்பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் தொடர்ந்து வாசிக்கும்பழக்கத்தை வளர்த்ததாலேயே உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். எனவே, மாணவர்கள் புத்தக வாசிப்பை வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.


 

வாசிப்பின் மூலம் கிடைக்கும் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கமும் வளர வேண்டும். இதன் மூலம் தன்னம்பிக்கை, மொழித்திறன் மற்றும் வெளிப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.


 

புத்தகங்களுடன் செய்தித்தாள்களையும் தினமும் வாசிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிப்பது மொழிஅறிவையும், சமகால நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிவு மிகவும்அவசியம். ஒரு தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டாலும் மனம் தளரக்கூடாது. இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து முயற்சி செய்தால்வெற்றி நிச்சயம்.


 

வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஒரு வாய்ப்பு தவறினாலும், அடுத்த வாய்ப்பை உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கனவுகாண வேண்டும்; அந்தக் கனவை நனவாக்க இலக்கை நோக்கி தொடர்ந்துபயணிக்க வேண்டும்.


 

நான் இன்று கருவூல அலுவலராகப் பணியாற்றும் நிலையில் இருப்பதற்குதொடர்ந்து கற்றலும் வாசிப்பும் காரணமாக அமைந்துள்ளன. என் தந்தைஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய ஓய்வூதியஆவணங்களில் அதிகாரியாக கையொப்பமிட்ட தருணம் என் வாழ்வின்மறக்க முடியாத பெருமையான தருணமாகும்என்று மாணவர்களுக்குஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.


 

தொடர்ந்து, கோடை விடுமுறையில் புத்தகங்களை வாசித்து சிறந்தமுறையில் கருத்துகளை பதிவு செய்து பின்னூட்டம் அளித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிமேற்கொண்ட இந்த முயற்சியை பெற்றோர்களும் ஆசிரியர்களும்பாராட்டினர்.


 

நிறைவாக  ஆசிரியர் ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy