தூத்துக்குடி வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளி சார்பாக நீடு துயில் எனும் தனி நபர் நாடகம் 6 நாட்களில் 7 அரங்கங்களில் அரங்கேறியது..
இந்நாடகத்தை வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராஜேந்திரன் இயக்கத்தில் கலை வளர்மணி ப. சக்திவேல் இசையில் தேசிய நாடகப்பள்ளியின் முன்னாள் மாணவர் யுகேஷ் பாபு நடித்திருந்தார்.
குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான உரையாடலை மையமாக வைத்து இந்நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது.
ஜூன் 18 அன்று தூத்துக்குடி புனித மரியன்னை தன்னாட்சி கல்லூரியிலும், ஜூன் 19
வெள்ளியன்று தூத்துக்குடியில் செயல்படும் வெக்கை பண்பாட்டு வெளி அரங்கிலும், ஜூன் 20
சனி அன்று தூத்துக்குடி சர்வைட் CBSC பள்ளியிலும், அன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக , தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்திலும், ஞாயிறு (21.06.26) அன்று கோவில்பட்டி பாரதி இல்லத்திலும் அரங்கேற்றப்பட்டது.

ஜூன் 22 திங்கள் மற்றும் ஜூன் 23 செவ்வாய் கிழமைகளில் காமராஜ் கல்லூரி காட்சி தொடர்பியல் மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
நவீன நாடகம், இலக்கியம் மற்றும் கலை குறித்த அறிமுகத்தை மாணவர்களிடம் மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் செயல்படும் வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளியின், நீடு துயில் நாடகம் குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகள், அதிகாரம், அரசியல், வரலாறு தொட்டு நிகழும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், நாட்டார் தெய்வங்கள என பன்முக கருத்துகளை நாடகம் வெளிப்படுத்துவதாக பங்கேற்ற பார்வையாளர்கள் கூறினர், மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்நாடகத்தை கொண்டு செல்வதே எங்கள் குழுவின் நோக்கம் என இயக்குனர் கார்த்திக் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்