சிலம்பப் போட்டியில் சேலம் சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

சிலம்பப் போட்டியில் சேலம் சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

மூத்த கலை, முதற்கலை இதர போர்க்கலைகளில் தாய்கலை அதுவே எங்கள்சிலம்பக்கலை" என சேலம் மாவட்டம் நரசசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள்

சிலம்பம் போட்டியில்   பதக்கங்களை வென்று சாதனை.

பத்மாவணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டபன்னாட்டு அளவிலான சிலம்பம் போட்டியில் நம் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேர் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளனர்.

*தனிநபர் கம்பு சுற்றுதல் மற்றும் தொடு முறை* ஆகிய இரு பிரிவுகளில்நடைபெற்ற இப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மூன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீமான் ஆதித்யா  இரு பிரிவுகளிலும் மூன்றாம்இடம்  பிடித்தார்.

பத்தாம் வகுப்பு மாணவன் மோனித்ராம் தனிநபர் பிரிவில் முதலிடமும், தொடுமுறையில் மூன்றாம் இடமும் பெற்றார்.

இரண்டாம் வகுப்பு மாணவன் கிருத்திக் இரு பிரிவுகளிலும் மூன்றாம் இடம்பிடித்து அசத்தினார்.

ஆறாம் வகுப்பு மாணவி மகிழினி தனிநபர் பிரிவில் இரண்டாம் இடமும், தொடு முறையில் மூன்றாம் இடமும் வென்றார். ஏழாம் வகுப்பு மாணவிமகிழினி  தனிநபர் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார்.

இச்சாதனை புரிந்த மாணவர்களுக்குச் சைதன்யா பள்ளியின்துணைப்பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா ரெட்டி அவர்களும், பள்ளியின் முதல்வர் அனிதா அவர்களும், மண்டல கல்வி நிலைய தலைவர்செல்லையா, துணை முதல்வர்  ஸ்ரீமதி ஸ்ரீனிவாசன், பொறுப்பாளர்களும், மற்றும் ஆசிரியர்களும் வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும்  தெரிவித்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy