தூத்துக்குடியில் கல்வியியல் ஆசிரிய மாணவியருக்கு பட்டமளிப்பு விழா...

தூத்துக்குடியில் கல்வியியல் ஆசிரிய மாணவியருக்கு பட்டமளிப்பு விழா...

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 2022-2024 மற்றும் 2023-2025 கல்வியாண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் பயின்ற ஆசிரிய மாணவிகளுக்கு 64ஆவது பட்டமளிப்பு விழா தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் பி. விக்டோரியா தங்கம், சுப்பையா தர்மநிதியின் அறங்காவலர் செ. கௌதமன் மற்றும் கல்லூரி செயலர் ச. முரளிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முன்னதாக அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சூர்யகலா அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குநர்  முனைவர் பி. விக்டோரியா தங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 120 இளங்கலை கல்வியியல் மாணவியர் மற்றும் 10 முதுகலை கல்வியியல் மாணவியர் என 130 மாணவ ஆசிரியர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்புவிழா உரை நிகழ்த்தினார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவியர் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Bahujan Louis

District Reporter - Thoothukudi

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy