விண்வெளி அறிவியல் மாநாடு நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது.
இந்திய அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து இவ்வாண்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை அக்டோபர் மாதம் கோவையில் நடத்த திட்டமிட்டு உள்ளது கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வு கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, அஸ்டரானமி போட்டோகிராபி, புதுமைக்கான விளையாட்டு உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க இணையதள வழியில் பதிவு செய்யலாம்.
பங்கேற்க கடைசி தேதி ஜூலை 14. பதிவு செய்த இளைஞர்களுக்கு மாநாட்டில் பங்கேற்பது குறித்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் நிபுணர்கள் பேராசிரியர்களால் இணையவழியில் வழங்கப்படும் பங்கு பெற https:// tass.co.in/yassc-2026 என்ற இணைய தளத்தில் பதிவு செய்க.