குளிர் உதடுகள் - இலக்கிய ஆர்வலர்களின் இனிய மாலை

குளிர் உதடுகள் - இலக்கிய ஆர்வலர்களின் இனிய மாலை

தூத்துக்குடி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் இலக்கியம் பூக்கும் இனிய மாலை - 285 நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்கு ஐயா துரை கணேஷன் தலைமை தாங்கினார். இலக்கிய செம்மல் பெ. சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து எழுத்தாளர் குமிழ்முனை சைமன் எழுதிய "குளிர் உதடுகள்" சிறுகதை நூலின் ஆய்வுரை இடம்பெற்றது.

இளம் இயக்குநர் ரா. ஆவுடை லட்சுமி நூலை ஆய்வு செய்து, நூலின் இலக்கியச் சிறப்புகள், கதைகளின் அமைப்பு மற்றும் அவை எடுத்துரைக்கும் அறம் சார்ந்த கருத்துகளை மிகத் தெளிவாக விளக்கி, நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயப் பார்வையையும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நூலாசிரியர் குமிழ்முனை சைமன் "குளிர் உதடுகள்" நூலுக்கான ஏற்புரையை வழங்கி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் த. இராஜலிங்கம்  "கல்கண்டு காமத்துப்பால்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

அவரது உரை இலக்கிய நயம் மற்றும் சிந்தனைத் தெளிவுடன் அமைந்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

நிகழ்வில் நெடுஞ்சாலை கவிஞர் த. செல்வராஜ், குளிர் உதடுகள் நூலாசிரியர் குமிழ்முனை சைமனை வாழ்த்தி கவிதை பாடினார்.

மேலும் ஐந்து நிமிடக் கவிதை நிகழ்வில் கவிஞர் ஜடா. ஸ்ரீ சவரிமுத்து மற்றும் கவிஞர் சரஸ்வதி பாபு ஆகியோர் கவிதை வாசித்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

இறுதியாக ஆதி அருமை நாயகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி இலக்கியச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் பயனுள்ள அரங்காக அமைந்தது.

Bahujan Louis

District Reporter - Thoothukudi

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy